Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த ஊழியர்….. அலறி சத்தம் போட்ட கல்லூரி மாணவி…. பரபரப்பு சம்பவம்….!!!

விடுதிக்குள் நுழைந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவமனை ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராயநகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஸ்ரீகாந்த்(22) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மயக்கவியல் படிப்பில் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் போதைக்கு அடிமையான ஸ்ரீகாந்த் தற்போது கீழ்பாக்கத்தில் இருக்கும் ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனை அடுத்து ஸ்ரீகாந்த் அங்குள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்து ஏற்கனவே ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ஸ்ரீகாந்த் சுவர் ஏறி குதித்து விடுதிக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அப்போது மாணவி சத்தம் போட்டதால் ஸ்ரீகாந்த் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ஆனால் அவரது செல்போனை விடுதியிலேயே விட்டு சென்றுள்ளார். இதனால் ஸ்ரீகாந்த் செல்போனை எடுப்பதற்காக மீண்டும் உள்ளே சென்றபோது பெண்கள் அவரை பிடித்து கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு இந்த போலீசார் ஸ்ரீகாந்த்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |