Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடுதியில் அறையில் வைத்து…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

புது மாப்பிள்ளை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சகாயமாதா தெருவில் மீனவரான கவாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கவாஸ்கர் ஒரு விடுதியில் வைத்து ராஜா என்பவருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவருக்கும், ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ராஜா கவாஸ்கரின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள் கவாஸ்கரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவாஸ்கர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரபல ரவுடியின் மகனுடன் சேர்ந்து ராஜா சிலரை மிரட்டி வந்துள்ளார். இதனை கண்டித்து கவாஸ்கர் ராஜாவுக்கு அறிவுரை கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜா கவாஸ்கரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தலைமறைவாக இருந்த ராஜாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |