கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கட ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோபி பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற போலீசார் ராஜின் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.