மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நலத்துறைக்கு பழனியில் இருக்கும் விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று விசாரணை நடத்தி பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பழனி சத்யா நகரில் வசிக்கும் கிருபாகரன், ராகுல், பரமானந்தம் மற்றும் 18 வயது கல்லூரி மாணவர் ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது.
இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் விடுதி பணியில் அலட்சியமாக இருந்த காப்பாளர் அமுதா, காவலாளி விஜயா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.