Categories
தேசிய செய்திகள்

விடுதியில் பாலியல் தொந்தரவு… வார்டனை ஆயுதங்களால் சரமாறியாக தாக்கிய மாணவிகள்… பெரும் பரபரப்பு…!!!!!!

கர்நாடகாவில் மாண்டியா மாவட்டம் காட்டேரி கிராமத்தில் அரசு பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தசன்ய மூர்த்தி என்பவர் அந்த விடுதியில் தலைமை வார்டனாக  பணியாற்றி வருகிறார். இவர் அவ்வபோது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த மாணவிகள் அவரை கம்பு, கட்டைகள் உள்ளிட்டவற்றால் சரமாறியாக  அடித்து தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரை மாணவிகள் உள்ளே விட மறுத்துள்ளனர்.

மேலும் விடுதியில் கதவை பூட்டிக்கொண்டு மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தலைமை வார்டனை  தாக்கியுள்ளனர். இதனையடுத்து போலீசார் நீண்ட நேரம் போராடி வார்டனை மீட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் “குற்றம் சாட்டப்பட்ட தலைமை வார்டன்  தங்களை ஆபாச வீடியோக்களை பார்க்க வைத்ததாகவும், தகாத முறையில் தொட வற்புறுத்தியதாகவும் மாணவிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் மாணவிகளின் இடமாற்ற சான்றிதழில் மோசமான குணாதிசயங்களைக் குறிப்பிட்டுவிடுவதாக எங்களை மிரட்டியதாக” அவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |