மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் ஒரு என்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் படித்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவருடன் சௌந்தர்ராஜன் மற்றும் சிவகுமார் என்ற 2 பேரும் விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் சதீஷ் விடுமுறைக்காக ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் கல்லூரிக்கு வந்துள்ளார். இதனையடுத்து சதீஷ் வயிறு வலி காரணமாக வகுப்பிற்கு செல்லாமல் விடுதியில் இருந்துள்ளார். அவருடன் இருக்கும் சக மாணவர்கள் வகுப்பறைக்கு சென்று விட்டு மீண்டும் விடுதிக்கு வந்துள்ளனர்.
அப்போது சதீஷ் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிவகுமார் மற்றும் சௌந்தர்ராஜன் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே கல்லூரி நிர்வாகம் மயிலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.