பத்தாம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் பெயிண்டரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி தீபா இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு குரு பிரகாஷ்(15), மனோ(14) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இருவரும் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி இருந்து ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் குரு பிரகாஷ் கடந்த 4 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். மேலும் தனது தாயின் நினைவு வந்ததால் குரு பிரகாஷ் சோகமாக இருந்துள்ளார். நேற்று காலை குருபிரகாஷ் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குரு பிரகாஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.