நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன் போட்டியிட்ட தாராபுரம் பகுதியில் அவரை எதிர்த்து திமுக சார்பாக கயல்விழி செல்வராஜ் களமிறக்கப்பட்டார். இதனையடுத்து இவர் ஆயிரத்து 383 வாக்குகள் வித்தியாசத்தில் எல். முருகனை தோற்கடித்தார். இதனால் அவருக்கு முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர் பதவி வழங்கி கௌரவித்தார். அந்தவகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கயல்விழி மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்கள் தன்னுடைய வீட்டு வேலைக்காரர்களாக கயல்விழி ஏன் பணியமர்த்த வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருக்கும் அண்ணாமலை, காற்றில் பறந்தது சமூகநீதி.! மக்கள் வரிப்பணத்தில் அநீதி.! என்று விமர்சனம் செய்துள்ளார்.