Categories
மாநில செய்திகள்

விடுமுறையில் சிறப்பு வகுப்பு….. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

மாணவர்கள் கோடை விடுமுறையில் கணினி, நீச்சல் பயிற்சி, ஓவியம் உள்ளிட்டவற்றை கற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இறுதித் தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இது முடிந்த பின் அவர்களுக்கும் கோடை விடுமுறை தொடங்கி விடும். இந்த கோடை விடுமுறையில் மாணவர்கள் கணினி, நீச்சல் பயிற்சி, ஓவியம் உள்ளிட்டவற்றை கற்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தங்களை மேம்படுத்த கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பிற்கு செல்ல வேண்டும் என அறிவித்த அவர் மாணவர்கள் வெயிலில் அதிகம் சுற்றாமலும், நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் கவனமாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |