எல்லை பாதுகாப்பு படை வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள அய்யனார்குளம் பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக மேற்கு வங்காளத்தில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்த சங்கரன் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.