சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்வர். விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டி படகு துறைக்கு சென்று படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் அங்குள்ள கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.