தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர்.
இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் உணவகங்கள் மற்றும் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்தது. மேலும் மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.