Categories
மாநில செய்திகள்

விடுமுறை நாட்களில் செயல்பட – தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும், தேர்தல் செலவுக்கான பணத்தை பெற கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு பில்களை அனுப்புவர். அவற்றுக்கு உடனடியாக பணம் வழங்க வசதியாக ஏப்ரல் 2, 4 ஆம் தேதி வரை விடுமுறை நாட்களில் கருவூல ஊழியர்கள் பணியாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |