Categories
மாநில செய்திகள்

விடுமுறை நாளை முன்னிட்டு….. குற்றால அருவிகளில் நிரம்பி வழியும் சுற்றுலாப்பயணிகள்…..!!!!

இன்று விடுமுறை நாள் என்பதால் குற்றால அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்கு இருக்கும் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளின் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.

மெயின் அருவியை விட பழைய குற்றாலம் அருவியில் அதிகமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் குற்றாலத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெரும்பாலான தங்கும் விடுதிகள் குற்றாலத்தில் நிரம்பிவிட்டது. இதனால் வாகன போக்குவரத்தும் அதிகரித்து காணப்படுகின்றது.

Categories

Tech |