தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு 600 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக சென்னையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையில், சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அதேபோல கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். பிற மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு பல்வேறு பகுதிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் ஜனவரி 1ஆம் தேதி வரை சென்னைக்கு கூடுதல் 600 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட பகுதியில் இருந்து சென்னை நோக்கி வருவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். .
அதேபோல நெல்லை, நாகர்கோவில், மதுரை, கோவை, ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய நகரங்களுக்கு சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் சென்று திரும்புவோர் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினசரி இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.