Categories
தேசிய செய்திகள்

விடுமுறை: 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அத்தியாவசிய சேவைகளை தவிர பிற சேவைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒன்று வங்கி சேவை. ஆனால் மே மாதத்தில் வங்கிகளுக்கு பல நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதத்தில் மொத்தம் 12 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். மே 1 தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதால் அன்று விடுமுறை. மே 29 கிழமை என்பதால் வங்கிகள் விடுமுறை. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் வெவ்வேறு விதிகள் ரிசர்வ் வங்கியின் வலைதளத்தின் படி, மே மாதத்தில் மொத்தம் ஐந்து நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். ஆனால் விடுமுறை பட்டியலில் உள்ளூர் மாநில அளவில் மட்டும் பயனுள்ள சில விதிமுறைகள் உள்ளன.

எல்லா மாநிலங்களிலும் 5 நாட்கள் விடுமுறை இருக்காது. ஏனென்றால் சில பண்டிகைகள் நாடு முழுவதும் ஒன்றாக கொண்டாடப்படுவதில்லை. இந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது. வங்கி விடுமுறை தவிர மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை ( மே 8 மற்றும் 22) வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். இதனைத் தவிர மே 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகள் உள்ளன. அதுமட்டுமன்றி கொரோனா காரணமாக வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே திறக்கப்படும். அதனால் வங்கி தொடர்பான சேவைகள் ஏதாவது இருந்தால் உடனே விரைந்து முடித்துக் கொள்ளுங்கள்.

Categories

Tech |