Categories
மாநில செய்திகள்

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. கொரொனோ பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு மீதான அச்சம் நிலவியது. இருப்பினும் பொதுத்தேர்வு நடைபெற்றதால் மாணவர்கள் தேர்வை எழுதி முடித்துள்ளனர்.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் 10 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வராததால் புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திட்டமிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் தவறாமல் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |