குடும்ப தகராறில் மனைவியும் குழந்தையும் பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .
கோவில்பட்டியில் உள்ள பாரதி நகரின் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் மைக்கேல். இவரின் மகன் ராம்ராஜ், 30வயதுடைய இவர் கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சீதா. இவர்களுக்கு 7-வயதில் பெண் குழந்தை உள்ளது. அடிக்கடி கணவன், மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது .
மேலும் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனைகளின் காரணமாக சீதா தன் மகளை கூட்டி கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று உள்ளார்.இதையடுத்து வாழ்க்கையில் வெறுப்படைந்த ராம்ராஜ் வீட்டில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்து கொண்டு உள்ளார்.
தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி மேற்கு காவல்துறயினர் இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குரு சித்திரவடிவேல் இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து ராம்ராஜ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைகப்பட்டது .இதையடுத்து ராம்ராஜ் தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குபதிந்து விசாரணை செய்ய பட்டு வருகின்றது.