Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விட்டு சென்ற காதல் கணவர்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி…. போலீஸ் விசாரணை…!!

மர்மமான முறையில் இளம்பெண் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் கனகரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயாகுமாரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாகுமாரியை பிரதீப் என்பவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் பாண்டியராஜன் என்ற மகன் உள்ளார். திருமணமான ஒரு வருடத்திலேயே பிரதீப் விஜயாகுமாரியைவிட்டு பிரிந்து சென்றார். இதனால் வாழ்க்கையை வெறுத்த விஜயாகுமாரி மேட்டுப்பாளையம் பகுதிக்கு சென்று பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் விஜயாகுமாரி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |