கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரேசில் அதிபர் மூன்றாவது முறையும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் மன வருத்தம் அடைந்துள்ளார்
கொரோனா ஒரு சிறு காய்ச்சல் தான் இதற்கு எதற்கு ஊரடங்கு, முக கவசம் எனக் கூறியவர் பிரேசில் அதிபர் போல்சோனரா. இவருக்கு கடந்த 10 ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். அதன் பின் ஒருவாரத்திற்கு மேல் கடந்த 15ம் தேதி போல்சோனரோ இரண்டாவது முறையாக பரிசோதனை செய்தார். அப்போதும் அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் மேலும் சில நாட்கள் தனிமை படுத்திய பின் விரைவில் பரிசோதனை செய்வேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மூன்றாவது முறையாகவும் பரிசோதனை செய்யப்பட்டதில் மீண்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிபர் தற்போது நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும் அவரை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் அது போல் தனது பணிகளை வீடியோ மூலமாக தொடர்ந்து கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. மூன்றாவது முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளதால் பிரேசில் அதிபர் போல்சோனரோ சற்று மன வருத்தம் அடைந்துள்ளார். தொற்று உறுதி செய்யப்பட்டது முதல் அதிபர் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.