ஜெர்மனியில் விண்கல்லையும் இஞ்சையும் பயன்படுத்தி கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் முறை பயன்பாட்டில் உள்ளது.
ஜெர்மனி முதன்முதலாக கொரோனாவை கண்டறியும் பரிசோதனையை உருவாக்கியிருந்தது. அதன் பின்பு அதற்கான தடுப்பூசியையும் முதன் முதலில் உருவாக்கியிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது விண்கல்லையும் இஞ்சியையும் பயன்படுத்தி கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் முறையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. அதாவது பிற நாடுகளில் அலோபதி தவிர்த்து மாற்று சிகிச்சை முறைகளான இயற்கை வைத்தியம் முதலானவற்றை பயன்பாட்டில் வைத்துள்ளனர். அதனை போல ஜெர்மனியிலும் இந்த சிகிச்சை பயன்பாட்டில் இருக்கிறது.
கடந்த 1861 ஆம் வருடம் ஆஸ்திரேலியாவில் பிறந்த Rudilf Steiner என்பவருடைய கொள்கைகளை பயன்படுத்தி ஸ்டெய்னர் மருத்துவமனைகள் இன்றளவும் ஜெர்மனியில் செயல்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இஞ்சி தாவரத்தின் வேரை பொடியாக்கி அதனை நெஞ்சில் பற்று போடுதல், கடுகு பொடி அல்லது Yarrow என்ற செடியில் தயாரிக்கப்படும் தேயிலை மற்றும் வீரியமிக்க பாஸ்பரஸ் மற்றும் விண்கல்லிலிருந்து எடுக்கப்பட்டிருக்கும் இரும்பு போன்றவற்றை ஹோமியோபதி முறைப்படி மாத்திரைகளாக தயாரித்து கொடுப்பது போன்ற வழிமுறைகளை கையாண்டு வருகிறது.
மேலும் இந்த மருத்துவம் பலனளிக்குமா? என்பது குறித்து உறுதி செய்யும் வகையில் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை. மேலும், அதனை ஆய்வு செய்வதற்கான காலமும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இவை கண்டிப்பாக நோயாளிகளுக்கு நன்மை அளித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சிகிச்சை முறை ஜெர்மனியில் சிலர் எதிர்த்து வந்தாலும் மற்றொரு பக்கம் அதற்கு ஆதரவும் உள்ளது. மேலும் கடந்த 1830 ஆம் வருடங்களில் காலரா நோய் ஜெர்மனியில் பரவியபோது ஹோமியோபதி சிகிச்சை உருவாகியுள்ளது. இதனை நினைவு கூறிய Robert Jutti என்ற மருத்துவ வரலாற்றாளர், அலோபதி மருத்துவம் தவித்து நின்ற போதெல்லாம் அதற்கு மாற்று சிகிச்சை முறைகள் தான் உயர்ந்துள்ளது என்பதை மறுக்க முடியாது என்று கூறியுள்ளார்.