புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் நபர்கள் இடைத்தரகர்கள் யாருமில்லாமல் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் இடைத்தரகர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் கைபேசி வாயிலாக பதிவேற்றம் செய்து கொள்ளும் வகையில் இலவசமாக ஒரு போர்ட்டல் Public Portal (www.tnpds.gov.in) இயங்கி வருகின்றது.
தர்மபுரி மாவட்டத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்பவர்களின் மனுக்கள் ஒரு வார காலத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும். தற்போது அரசு இ-சேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் புதிய குடும்ப அட்டைகள் விண்ணப்பிக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு கட்டணமாக 60 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், ஆதார் அட்டை போன்ற பணிகளுக்கு தலா 30 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தவர்கள் மேற்கொண்டு தகவல் தேவைப்படின் அனைத்து பணிகளுக்கும் தங்கள் வட்டத்திற்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி – 9445000217, பென்னாகரம் – 9445000218, பாலக்கோடு -9445000219, அரூர் – 9445000220, பாப்பிரெட்டிபட்டி – 9445000221, காரிமங்கலம் – 9445796431, நல்லம்பள்ளி – 9445796432. குடும்ப அட்டைகள் தொடர்பாக தனியார் இணையதள சேவை மையங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூன்றாம் நபர்கள் யாரையும் தொடர்பு கொள்ள வேண்டாம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.