Categories
மாநில செய்திகள்

“விண்ணப்ப நிராகரிப்பு வழக்கு”…. தமிழ்நாடு அரசு விரிவான விளக்கம் கொடுக்க ஏற்பாடு…..!!!!!

விண்ணப்ப நிராகரிப்புக்கான காரணம் வருகிற காலங்களில் விரிவாக ஆயிரம் எழுத்துகளில் தெரிவிக்கப்படும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

சேலம் மாவட்டத்தை சோ்ந்த சின்னப்பையன் என்பவா் கடந்த வருடம் இறந்தாா். இதனையடுத்து அவரது தாயாா், சின்னப்பையன் வாரிசு சான்றிதழ் கேட்டு இ-சேவை வாயிலாக விண்ணப்பம் செய்தாா். இவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அவா் வழக்குத் தொடா்ந்தாா். இது குறித்த அவரது மனுவில், நேரடியாக வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் போது அதனை வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் நேரடி விசாரணை மேற்கொண்டு அறிக்கை கொடுக்கின்றனா். அதன்படி வட்டாட்சியா் தகுந்த விளக்கமளித்து விண்ணப்பத்தை நிராகரிக்கின்றாா். எனினும் இ-சேவை வாயிலாக விண்ணப்பம் செய்யும்போது இது போன்ற விளக்கம் அளிக்கப்படுவது இல்லை என கூறி இருந்தாா்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இந்த நடைமுறை சிக்கலை சரிசெய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன் மீண்டும் சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் வழக்குரைஞா் கெளசிக் ஆஜரானாா். அவா் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட காரணத்தை முன் 100 எழுத்துகளில் தெரிவிக்கவேண்டும் என்ற வரையறை இருந்தது. இப்போது ஆயிரம் எழுத்துகள் என்று உயா்த்தப்பட்டுள்ளது. ஆகவே விரிவான விளக்கத்துடன் உத்தரவு இனிமேல் பிறப்பிக்கப்படும் என்று கூறினார். அதன்பின் அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி, வழக்கை முடித்துவைத்தாா்.

Categories

Tech |