ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் EOS-04 என்ற செயற்கை கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது. புவியில் இருந்து சுமார் 530 கி.மீ உயரத்தில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் EOS-04 என்ற செயற்கை கோள்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. விவசாயம், வனம், வெள்ளம் போன்றவற்றை துல்லியமாக படம்பிடிக்கும் அதிநவீன கேமரா EOS-04-ல் உள்ளது.
பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட EOS-04 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இன்ஸ்பயர் சாட்-1, ஐஎன்எஸ்-2டிடி ஆகிய சிறிய வகை செயற்கை கோள்களும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பூமியை கண்காணிக்க உள்ள 1, 170 கிலோ எடை கொண்ட செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.