உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு உக்ரைன்-ரஷ்யா மட்டுமின்றி ஈரானும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.
கச்சா எண்ணெய்
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் சென்ற ஒருவார வர்த்தகத்தில் இதனுடைய விலையானது ஏற்ற-இறக்கத்தைச் சந்தித்துள்ளது. இந்த தடுமாற்றத்தில் ஐரோப்பிய நாடுகளின் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது ஒருபேரல் 120 டாலராகவும், அமெரிக்காவின் WTI கச்சாஎண்ணெய் விலை 115 டாலராகவும் அதிகரித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை
இப்போது ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை பெறுவதை உலகநாடுகளானது பெருமளவில் குறைத்துள்ளது. இதன் காரணமாக கச்சாஎண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவி விலையானது அதிகரித்துள்ள நிலையில் உக்ரைன் -ரஷ்யா பிரச்சனை வாயிலாக கச்சா எண்ணெய் விலை கட்டாயம் 145 டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான்
ஈரான் நாட்டு உடனான மேற்கத்திய நாடுகளின் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து தாமதம் ஆகும் காரணத்தால் ஈரானிய கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைகளுக்குள் விரைவில் வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக இந்த வாரம் கச்சா எண்ணெய்யின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
ரஷ்யா, சீனா
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அமெரிக்கா ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதித்துள்ளது. இந்த நிலையில் முன்பே தடை விதிக்கப்பட்ட ஈரான் உடன் ரஷ்யா இணைந்து பணியாற்றுவதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று ரஷ்யா கேள்வி எழுப்பியுள்ளது. இதேபோன்று சீனாவுடன் சில முக்கியமான கேள்விகளையும், கோரிக்கைகளையும் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
# WTI கச்சா எண்ணெய் – 115.68 டாலர்
# பிரெண்ட் கச்சா எண்ணெய் – 118.11 டாலர்
# இயற்கை எரிவாயு – 5.016 டாலர்
# OPEC பேஸ்கட் கச்சா எண்ணெய் – 117.06 டாலர்
# இந்திய பேஸ்கட் கச்சா எண்ணெய் – 117.39 டாலர்