உலகின் முதல் உடல் ஊனமுற்ற விண்வெளி வீரரை பணியமர்த்திய தாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பல நூறு பேர் பாரா-விண்வெளி வீரர்கள் இந்த வேலைக்காக ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர் என்று ஈஎஸ்ஏ தலைவர் ஜோசப் அஷ்பாச்சர் வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
22 உறுப்பினர்களைக் கொண்ட விண்வெளித் திட்டம் விண்வெளி வீரர்களுக்கான சமீபத்திய ஆட்சேர்ப்பு அழைப்பை முடித்துவிட்டு 22,000 விண்ணப்பதாரர்களைப் பெற்றுள்ளது என்று ஆஷ்பேச்சர் கூறினார். ஒரு ஊனமுற்ற ஒரு விண்வெளி வீரரை நாங்கள் விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளோம். இது முதல் தடவையாகும் என்று கூறினார். மேலும் அந்தத் திட்டத்தை குறித்து முழு விவரம் வெளியிடப்படாத நிலையில், மாற்றுத்திறனாளி விண்வெளி வீரர் இடம் பெற்றுள்ளார் என்ற தகவலை மட்டும் அளித்துள்ளது. இதுகுறித்து கூறிய ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் இயக்குனர் ஜோசப் அஸ்பாக்கர் விண்வெளி அனைவருக்குமானது என்று தெரிவித்துள்ளார்.