Categories
உலக செய்திகள்

விண்வெளிக்கு செல்லும் முதல் பூர்வீக அமெரிக்க பெண்மணி… வரலாறு சாதனை படைப்பு…!!!!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இதில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் ஐந்து ஆராய்ச்சி கூடங்கள் அமைந்துள்ளது. ரஷ்யாவிற்கு சொந்தமான இந்த சிறிய ஆராய்ச்சி கூடங்களும் அமெரிக்கா ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு தலா ஒரு ஆராய்ச்சி கூடங்களும் இருக்கிறது இந்த ஆராய்ச்சி கூடங்களில் ஆண் மற்றும் பெண் வீராங்கனைகள் பணியாற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு செல்லும் முதல் பூர்வீக அமெரிக்க பெண்மணி எனும் பெருமையை நிக்கோல் ஆனாப்பு மான் என்பவர் பெறுகின்றார். இந்த வாய்ப்பிற்காக அவர் 9 வருடங்களாக காத்திருக்கின்றார் இது பற்றி நாசா அமைப்பு பேசும்போது 2013 ஆம் வருடம் ஜூனில் நாசாவால் நிக்கோல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்க்ரூ டிராகன் என்ற விண்கலத்தில் வருகின்ற ஐந்தாம் தேதி பயணம் செய்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைகின்றார்கள் என கூறியுள்ளது. மேலும் அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாண பகுதியை சேர்ந்தவரான நிக்கோல் இயந்திரவியல் பொறியியல் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றிருக்கின்றார். இவர் இரண்டு முறை விமானம் தாங்கி கப்பல்களில் பயணம் செய்த அனுபவம் கொண்டது மட்டுமல்லாமல் அமெரிக்க கடற்கரையில் கர்னல் ஆகவும் பணியாற்றியுள்ளார். இந்த விண்வெளி வீரர்கள் தேவைப்படும்போது விண்வெளி நிலையத்திற்கு வெளியே வந்து பராமரிப்பு பணிகளை செய்யக்கூடிய நிகழ்வுகளும் உண்டு இதற்கான விண்கலம் அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்படும். இதற்கு முன்பு 2002 ஆம் வருடம் ஜான் ஹெர்ரிங்டன் என்ற பூர்வீக அமெரிக்க வீரர் முதன் முறையாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வரிசையில் நிக்கோல் முதல் பூர்வீக அமெரிக்க பெண்மணி என்னும் வரலாறு சாதனையை படைத்திருக்கின்றனர்.

Categories

Tech |