இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறக்கும் இரண்டாவது பெண்மணி என்ற சாதனையை ஸ்ரீஜா பாண்ட்லா பெறுகிறார்.
இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி என்ற சாதனையைப் படைத்தவர் கல்பனா சாவ்லா. இதையடுத்து இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறக்கும் இரண்டாவது பெண் என்ற சாதனையை ஸ்ரீஜா பாண்ட்லா சொந்தமாக்கி உள்ளார். 34 வயதாகும் ஸ்ரீஜா ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவராக இருந்தாலும், இவருக்கு ஐந்து வயது இருக்கும் போதே இவரது தாய் தந்தையுடன் அமெரிக்கா சென்று அங்கு தான் தனது படிப்பை அனைத்தையும் முடித்துள்ளார். மேற்படிப்பை முடித்துக்கொண்டு ஸ்ரீஜா பர்டியூ பல்கலைக்கழகத்தில் விமான பொறியியலும், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார்.
ஸ்ரீஷா விண்வெளிக்கு அனுப்பும் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் இணைந்தார். விண்வெளிக்கு செல்வதற்கு மிகவும் ஆர்வமாக இருந்த ஸ்ரீஜா அது சம்பந்தப்பட்ட அனைத்து படிப்புகளையும் படித்து தற்போது விண்வெளியில் பயணிக்கும் 6 வீரர்களில் ஒருவராக இருக்கின்றார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த ஸ்ரீஜா இது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என கூறியுள்ளார். ஸ்ரீஜாவின் 85 வயதான தாத்தா டாக்டர் ராகையா, தன் பேத்தியின் இந்த பயணம் குறித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.