கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சீனா தனது புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சீனா தனது விண்வெளி திட்டங்களில் தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அவ்வாறு பல செயற்கைக் கோள்களை தொடர்ந்து விண்ணுக்கு அனுப்பி கொண்டிருக்கிறது. அவ்வகையில் நேற்று தனது புதிய ஆர்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் இருக்கின்ற ஜிச்சாங் செயற்கைக் கோள் ஏவு தளத்திலிருந்து காப்பேன் 13 என்ற அந்த செயற்கைக்கோள் மார்ச் 3 பி கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
அவ்வாறு செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் நில அளவீடுகள், நகரத் திட்டமிடல், சாலைகள் வடிவமைப்பு, பயிர் விளைச்சல் மதிப்பீடு மற்றும் பேரழிவு தடுப்பு நடவடிக்கை ஆகியவற்றிற்கு இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படுவதாகவும்,நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் 6 ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.