6 மாதங்களாக விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி மேற்கொண்ட 3 விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நேற்று பூமிக்கு வந்தனர்.
ரஷ்யாவை சேர்ந்த செர்கே ரைசிகோவ், செர்கே குத்-ஸ்வெர்ச்கோவ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த கேட் ரூபின்ஸ் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சென்றுள்ளனர். இவர்கள் 6 மாதங்கள் கிட்டத்தட்ட 187 நாட்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகள் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று ரஷ்யாவின் Soyuz MS-17 விண்கலம் மூலம் அந்த 3 விண்வெளி வீரர்களும் பூமிக்கு திரும்பி வந்துள்ளனர். இவர்கள் வந்த விண்கலம் கஜகஸ்தானின் உள்ளூர் நேரப்படி காலை 10.55 மணி அளவில் தரையிறங்கியுள்ளது. இதையடுத்து விண்கலத்திலிருந்து பூமிக்கு வந்த வீரர்களுக்கு புவி ஈர்ப்பு விசை பழக்கப்படுவதற்காக அவர்களை பத்திரமாக வெளிய அழைத்து வந்துள்ளனர். மேலும் அந்த 3 விண்வெளி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.