Categories
உலக செய்திகள்

“விண்வெளியில் விளைவித்த அரிசி” சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை….. உலக நாடுகள் ஆச்சரியம்….!!!!

சீன நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய சாதனையை படைத்துள்ளனர்.

சீனா விண்வெளியின் சுற்றுவட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடையாத நிலையில், வென்சியன் என்ற ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் பூஜ்ஜியம் புவியீர்ப்பு விசையில் 2 விதமான தாவரங்களை பயிரிட்டுள்ளனர். அவர்கள் தாலே கிரேஸ் என்ற முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த செடியையும், அரிசி வகையைச் சேர்ந்த செடியையும் பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில் விண்வெளியில் கதிரியக்கங்கள் அதிக அளவில் இருப்பதால், அவற்றில் தாவரங்களின் செயல்பாடுகளை புரிந்து கொள்வதற்காக வாழ்க்கை அறிவியலில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து விஞ்ஞானிகள் பயிரிட்ட 2 செடிகளில் அரிசி செடி எதிர்பார்த்ததை விட 30 சென்டிமீட்டர் அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்த செடிகளை பூமி போன்ற சூழ்நிலையை கொண்ட, செயற்கை சூழலை பயன்படுத்தி வளர்த்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடந்த வருடம் ஜூலை மாதத்தில் இருந்தே விண்வெளியில் தாவர விதைகளை வளர்ப்பது தொடர்பான ஆய்வில் சீனா ஈடுபட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலையில் விண்வெளியில் இருந்து கொண்டு வந்த விதைகளை பயிரிட்டு சீனா அரிசியை அறுவடை செய்தது. அதாவது சீனாவில் இருந்து விண்வெளிக்கு அரிசி கொண்டு செல்லப்பட்டு அதன் பின் பூமிக்கு கொண்டுவரப்பட்டு பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டது. இந்த அரிசிக்கு சொர்க்கத்திலிருந்து வந்த அரிசி என பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சீனா பூஜ்ஜியம் புவி ஈர்ப்பு விசையில் அரிசியை பயிரிட்டு சாதனை படைத்துள்ளதை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

Categories

Tech |