Categories
அரசியல்

விண்வெளி ஆய்வில் உச்சம் தொட்ட விக்ரம் சாராபாய்…. அவரின் சாதனைகள் என்னென்ன….? இதோ சில தகவல்கள்…!!!!!!!!

இந்திய விண்வெளியின் தந்தை என அறியப்படுகின்ற விக்ரம் சாராபாய் இஸ்ரோ தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் ஆராய்ச்சியும் மேற்கொண்டவர். அவர் திண்டுக்கல் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருமகன். இவ்வாறு பல தொழில் முறை மற்றும் குடும்ப தொடர்புகளை தமிழகத்துடன் கொண்டவர் விக்ரம் சாராபாய். துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் மூலம் ஒரே சமயத்தில் 14 செயற்கைக்கோள்களை ஏவி 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் உலக சாதனை நிகழ்த்தியது இந்தியா.

மேலும் இந்த செயற்கைக்கோள்களை அதன் சுற்றுவட்ட பாதையில் சரியாக இணைப்பதற்கு டாக்டர் சிவன் அவர்களின் தொழில்நுட்ப அறிவு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புவி ஒருங்கிணைவு செயற்கைக்கோள் ஏவு வாகன திட்டத்திலும் டாக்டர் சிவன் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது. தலைமை பொறுப்பிற்கு வந்த முதல் வருடத்திலேயே இரண்டு முக்கிய திட்டங்களை இவர் செயல்படுத்த தொடங்கியுள்ளார்.

சந்திராயன் 1 மற்றும் பூவி ஒருங்கிணைவு செயற்கைக்கோள் ஏவு வாகன திட்டம் போன்றவை ஆகும். பெரிய அளவிலான விண்வெளி ஏவு வாகனங்களை குறைந்த செலவில் தயாரிக்கவும் இவர் திட்டமிட்டு இருக்கிறார். திட்டத்தை விரைவாக செயல்படுத்த விண்வெளி ஆய்வுக்கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. சந்திராயன்  திட்டத்தை அறிவிக்கப்பட்ட தேதியில் அதாவது ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 16ஆம் தேதிக்குள் செயல்படுத்துவதற்கான அருமையான வாய்ப்பு அமைந்திருந்தது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அறிவிக்கப்பட்டதில்  இந்த திட்டத்தை நிறைவேற்றும் என டாக்டர் சிவன் அவர்கள் தெரிவித்துள்ளார். சந்திரனின் தெற்கு முனைக்கு அருகே செல்வதன் மூலம் சந்திராயன் 2 திட்டம் புதிய உலக வரலாற்றை மிக விரைவில் படைக்க இருக்கிறது என டாக்டர் சிவன் கூறியுள்ளார். சந்திராயன் 2 விண்கலம் ஆர்பிட்டர், லாண்டர், ஓவர் ஆகிய மூன்றையும் சுமந்து செல்கின்றது. ரோவர் ஒரு முழு சந்திர நாள்  வரை இருந்து ஆய்வு செய்யும். அங்குள்ள பகல் பொழுதை தன்னுடைய ஆய்விற்காக முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்.

இந்த விண்கலத்தின் இயக்கத்திற்கு தேவையான அனைத்து செயல்பாடுகளும் நன்கு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் விண்கலத்தோடு இணைக்கப்பட்ட ரோவர் சந்திரனின் மேற்பரப்பில் 100 மீட்டர் தூரம் வரை நகர்ந்து சந்திரனின் மேற்பரப்பில் உள்ள பொருட்களை ஆராயும் மேற்பரப்பில் உள்ள பொருட்களை ஆராய்ந்து அதனுடைய முடிவுகளை அடுத்த 15 நிமிடங்களில் படங்களாக பூமிக்கு அனுப்புகிறது.

Categories

Tech |