விதவைப் பெண்களுக்கு உதவும் வகையில் வித்வா பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டம் தான் பென்ஷன் யோஜனா விதவைப் பெண்களுக்கு உதவுவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும் இதற்கான பென்ஷன் தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் விதவை பெண்களுக்கு பென்சன் பணம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் பயன் பெறுவதற்கான சில விதிமுறைகள் இருக்கிறது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள விதவைப் பெண்கள் மட்டுமே இத்திட்டத்தில் இணைய முடியும். அதே போல வேறு எந்த பென்சன் திட்டத்தில் இணைந்து பயன்பெறும் விதவை பெண்கள் இத்திட்டத்தின் கீழ் இணைய முடியாது. ஹரியானா மாநிலத்தில் விதவைப் பெண்களுக்கு மாதம் 2,250 ரூபாய் பென்ஷன் கிடைக்கிறது. ஆனால் வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக உள்ள பெண்களுக்கு மட்டுமே இந்த உதவி கிடைக்கும். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விதவை பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 ரூபாய் பென்ஷன் வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூபாய் 900 டெல்லியில் ரூ.2500, ராஜஸ்தான் ரூ.750 ,உத்தரகாண்டில் ரூ.1200, குஜராத்தில் ரூ.1250 என வெவ்வேறு அளவில் விதவைப் பெண்களுக்கு பென்சன் பணம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு ஆதார் கார்டு கட்டாயம். மேலும் கணவன் இருந்ததற்கான இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், வயதுக்கான சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், மொபைல் நம்பர், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை தேவைப்படுகிறது.