Categories
மாநில செய்திகள்

விதிகளை மீறினால் அபராதம்…. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். கொரோனா தடுப்பு விதிகளை மீறும் நிறுவனங்கள், கடைகள் மீதும் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |