நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள ஆண்டவர் தர்காவின் 466 -வது ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நாகையில் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்தும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு பேசிய போது, ஆட்டோக்களை நடப்பில் உள்ள ஆவணங்களுடன் இயக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்க கூடாது.
மேலும் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக நபர்களை ஏற்று செல்லக்கூடாது. செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்குதல் கூடாது எனவும் அனைத்து டிரைவர்களும் சீருடை அணிந்து வாகனம் இயக்க வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதனையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது, “ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் விதிகளை மீறி ஷேர் ஆட்டோக்களை இயற்றினால் தணிக்கை அறிக்கை வழங்கி வாகனங்கள் சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளனர்.