Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விதிகளை மீறிய பிரபலமான 3 கடைகள்… அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்… கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக எச்சரிக்கை…!!

கொரோனா தடைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து சீல் வைத்தனர்.

கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அதிகமாக கூடும் 3000 சதுர அடி கொண்ட கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலை மற்றும் காந்தி சாலை போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்பொருள் அங்காடிகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஜவுளி கடைகள் என 50க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனை அடுத்து ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் முன்பக்கம் கதவை மூடி பின் கதவை திறந்து வைத்து வியாபாரிகள் துணிகளை விற்பனை செய்து உள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பின்புற கதவை திறந்து வைத்து வியாபாரம் செய்த கடைகளுக்கு தலா ரூபாய் 5000 வீதம் அபராதம் விதிதுள்ளனர். மேலும் பின்புறமாக கதவை திறந்து வைத்து விற்பனை செய்த பிரபலமான 3 ஜவுளி கடைகளையும் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி அபராதம் விதித்ததோடு, கடைகளுக்கு சீல் வைத்துள்ளார். இவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்ப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்ததால் ரூபாய் 70 ஆயிரம் பணம் வசூலிக்கபட்டதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

Categories

Tech |