விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்துள்ளார்..
ஈரோட்டில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையும் ஆய்வு செய்து நிறைவு (completion) சான்று இருந்தால் மட்டுமே மின், குடிநீர் இணைப்பு பெற முடியும். அரசு, தனியார் துறை கட்டுமான நிறுவனங்கள் சட்ட திட்டங்களை முழுமையாக பின்பற்ற வேண்டும். விதிகளை மீறி கட்டுமானம் கட்ட உரிமையாளர் கூறினாலும் பொறியாளர் அனுமதிக்க கூடாது. புதிய கட்டுமானங்களில் விதிமீறல்கள் கடந்த காலங்களை போல் அனுமதிக்கப்பட மாட்டாது. விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.