தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கை வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதனால் மக்கள் வெளியில் சுற்ற தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஊரடங்கில் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், முகக்கவசம், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருசிலர் அலட்சியத்துடன் நடந்துகொள்வதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேதனை தெரிவித்துள்ளார். விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.