Categories
மாநில செய்திகள்

விதிகளை முறையாக பின்பற்றாத ரயில்வே…. தொடர்ந்து உயிரிழக்கும் யானைகள்…. அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ரயில்கள் மோதி 61 யானைகள் உயிரிழந்துள்ளது என்று ராஜ்யசபாவில் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் அடையாளம் காணப்பட்ட வழிதடங்களில் 37 யானைகள் மற்றும் அடையாளம் காணப்படாத வழித்தடங்களில் 24 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதை தடுப்பதற்காக ரயில்வே அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், வன அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இருப்பினும் ரயில்களில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி வழித்தடங்களில் வேகக்கட்டுப்பாடுகள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இதுவரை அமல்படுத்தவில்லை. அதுமட்டுமில்லாமல் ரயில்வே வழித்தடத்தின் குறுக்கே யானைகள் கடக்க உள்ள பகுதிகளில் மணிக்கு 50 வேகத்தில் இரயில்கள் செல்ல வேண்டும் என்ற விதியும் ரயில்வே மண்டலங்கள் பின்பற்றவில்லை.

அதனைத்தொடர்ந்து யானைகள் நடமாட்டத்திற்கு வசதியாக ரயில்வே தண்டவாளத்தில் மேம்பாலம் அமைப்பதற்கு வனத்துறை ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் யானைகள் நடமாட்டம் உள்ள சில பகுதிகளில் போர்டுகள் தவறான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால் ஓட்டுநர்கள் கவனமாக ரயிலை இயக்கினாலும் விபத்து ஏற்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |