Categories
தேனி மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை…. வேட்பாளர்கள் உள்பட 32 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் தீவிர கண்காணிப்பு….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகளை மீறிய 2 வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 32 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதனடிப்படையில் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட 19வது வார்டு அதிமுக வேட்பாளர் சண்முகசுந்தரம், 32வது வார்டு திமுக வேட்பாளர் செல்வம் ஆகிய 2 வேட்பாளர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் தேர்தல் விதிமுறைகளை மீறிய திமுக நிர்வாகிகள் 20 பேர், அதிமுக நிர்வாகிகள் 7 பேர், பாமகவினர் 2 பேர், பாஜகவினர் 2 பேர் என மொத்தம் 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |