விதிமுறைகளை மீறியதற்காக பாகிஸ்தானை சேர்ந்த 1.24 கோடி வீடியோக்களை நீக்கியுள்ளதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான வீடியோக்களை டிக் டாக் நிறுவனம் நீக்கியது. இதில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் 1,24,90,309 வீடியோக்களை டிக் டாக் நிறுவனம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக டிக் டாக் நிறுவனம் நிர்ணயத்துள்ள விதிமுறைகளை மீறி வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவற்றை நீக்கப்பட்டுள்ளதாக டிக் டாக் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதையொட்டி டிக் டாக் பாதுகாப்பு குழு 41,191 வீடியோக்களை நீக்கியுள்ளது. இதில் 81% வீடியோக்கள் எதிர்மறையானது என்றும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொய்யான தகவல்கள் அடங்கியது என்றும் டிக்டாக் நிறுவனம் கூறுகின்றது.