Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

விதிமுறைகளை மீறி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூரிலிருந்து கம்பைநல்லூர் செல்லும் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறையை மீறி ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள் என 6 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

இதனையடுத்து தமிழக அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் குறித்து போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும், குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும், விபத்துகளை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |