விதிமுறைகளை மீறிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அனுமதிக்கப்படாத இடமான பூமாலை வணிக வளாகம் அருகில் ஷேர் ஆட்டோக்களை ஓட்டுநர்கள் வரிசையாக நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றி கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த காவல்துறையினர் போக்குவரத்து விதியை மீறிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இதுபோல போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.