தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தியுள்ள விதிமுறைகளால் சிவகங்கை நகரம் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழக அரசு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு புதிய கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி சிவகங்கை நகர் பகுதியில் மளிகை, காய்கறி கடைகள் நண்பகல் 12 மணிக்கு அடைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அங்குள்ள கடைகள் முழுவதும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் சோதனைக்கு பிறகு அடைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சிவகங்கை நகரின் முக்கிய சாலைகளான காந்தி வீதி, அரண்மனை வாசல், தொண்டி சாலை, நேரு கடை வீதி, தெற்கு ராஜரத வீதி, மதுரை சாலை, திருப்பத்தூர் சாலை ஆகிய முக்கிய சாலைகள் பிற்பகலுக்கு பின்னர் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் அத்தியாவசிய மருந்து கடைகள் மட்டுமே அப்பகுதியில் திறக்கப்பட்டிருந்தது. அதேபோல் இளையான்குடி, காளையார்கோவில், திருப்புவனம், திருப்பத்தூர், சிங்கம்புணரி, மானாமதுரை ஆகியன பொதுமக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளும் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது.