வேலூர் மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த பேருந்து குடியாத்தம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆற்காடு தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படடியும், பேருந்தின் பின்புறம் ஆபத்தான முறையில் பயணம் செய்ததை ஓட்டுநரும், நடத்துனரும் கண்டிக்கவில்லை.
இந்நிலையில் பேருந்து அதிவேகமாக இயக்கியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகப்படியான ஆட்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் எச்சரித்துள்ளார்.