விதிமுறைகளை மீறிய ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து, ஆம்னி பேருந்து, வேன் ஆகியவற்றை போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 21 ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.