Categories
தேசிய செய்திகள்

விதிமுறையை மீறிய கார்…. போலீஸ் மீது மோதியதால் பரபரப்பு…. ஒருவர் கைது….!!

ட்ராபிக் போலீஸ்காரர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை அந்தேரியில் உள்ள ஆசாத் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் டிராபிக் போலீஸ் விஜய்சிங் குராவ். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை அவர் வழிமறித்து உள்ளார். விதிமுறைகளை மீறி வந்த அந்த கார் நிற்காமல் வேகமாக வந்து போலீஸ்காரர் மீது மோதியுள்ளது. இதில் அவர் முன்பக்கம் உள்ள பேனட்டின் மீது விழுந்தார். இருப்பினும் அந்த காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்தாமல் போலீஸ்காரரை பெனெட்டில் தொங்கிய படியே இழுத்துச் சென்றார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக  வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய  கத்துரியா என்பவரை மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர். இவரை போலீஸ் காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |