போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களிடமிருந்து அதிகாரிகள் ஒரே நாளில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை செல்லும் சாலையில் வட்டார போக்குவரத்து அதிகாரி காளியப்பன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியாக விதிமுறைகளை மீறி வந்த இரண்டு ஆம்னி பேருந்து மற்றும் அதிக பாரம் ஏற்றி வந்த 8 வாகனங்களை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
இதனை அடுத்து அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்கள், ஒரு கார் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காகவும், உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தை இயக்கியதற்காகவும், அதிக பாரங்கள் ஏற்றி வந்ததற்காகவும் ஒரே நாளில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.