Categories
தேனி மாவட்ட செய்திகள்

விதியை மீறி செயல்படுதாங்க….. காவல்துறை அதிகாரியின் அதிரடி உத்தரவு…. தேனியில் நடந்த நிகழ்ச்சி….!!

தேனியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

தேனியில் கொரோனா மிக வேகமாக படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் வேன் மற்றும் கார் போன்ற வாகனங்களில் கொரோனா விதிமுறைகளை மீறி அதிகளவில் நபர்களை ஏற்றி செல்வது போன்ற செயல்கள் நடைபெறுகிறது. இதனால் மாவட்த்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சாய்சரண் தேஜஸ்வி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாடகைக்கு விடப்படும் வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி தேனியிலிருக்கும் காவல் நிலையத்தில் அவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் வாகன ஓட்டிகள் கட்டாயமாக கவசத்தை அணிவது, அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கையை சுத்தம் செய்வது போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |