Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விதியை மீறி செயல்பட்ட… 147 வாகனங்கள் மீது வழக்கு பதிவு… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!!

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின் விதிகளை மீறிய 147 வாகனங்களின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உலககெங்கிலும் கொரானா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் இரட்டை மண்டபம், பேருந்து நிலையம், காஞ்சிபுரம் காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டமும், வாகனங்களும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர்  நகரின் முக்கிய பகுதிகளில் சோதனைச் சாவடி அமைத்து விதிகளை மீறுபவர்களை கண்காணித்து வந்துள்ளனர்.

அதன் படி ஊரடங்கின் விதியை மீறி வெளிய சென்ற 147 வாகனங்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அத்தியாவசிய தேவைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவைகள், மருந்தகங்கள் மட்டுமே இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளனர். மேலும் ஊரடங்கின் விதிமுறைகளை மீறி பொது மக்கள் செயல் படக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார். அதோடு இந்த  ஊரடங்கு நாளிலும்  கபசுரக் குடிநீர், காய்ச்சல் சிறப்பு முகாம்கள் மற்றும் நகர் முழுமையும் நகராட்சி ஊழியர் தூய்மை பணி போன்றவை நடைபெற்றுள்ளது. அதன் பின் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |